வடமராட்சி கொம்மந்தறை இளைஞர்கள் விளையாட்டுக்கழகம் அகில இலங்கை ரீதியில் மின்னொயில் நடாத்திய மாபெரும் கிரிக்கட் சுற்றுத் தொடரின் முதல் போட்டியில் ருதேஷாவின் சகலதுறை ஆட்டத்தினால், கரவெட்டி கொலின்ஸ் வி.க ஐ 21 ஓட்டங்களால் வீழ்த்திய எமது வல்வை வி.க, இரண்டாவது போட்டியில் உலகராசாவின் அதிரடிப்பந்து வீச்சின் உதவியுடனும், அணியின் சிறந்த களத்தடுப்பினாலும் வதிரி ஸ்ரீமுருகன் அணியினை ஒரு ஓட்டத்தினாலும் வீழ்த்தி, மூன்றாவது சுற்றில் காமாட்சி அணியினரிடம் 07 இலக்குகளால் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
