Search

தைப்பொங்கலை முன்னிட்டு 07.01.2018 உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான ஒன்றுகூடல்

தைப்பொங்கலை முன்னிட்டு 07.01.2018 நேற்று இலங்கைத் தமிழ் பொறியியலாளர்கள் (பேராதனை ,மொரட்டுவை ,கிளிநொச்சி ,ஒலுவில்,றுகுனு)ஆதரவுடன் உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகத்தால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான ஒன்றுகூடல் இந்த ஒன்று கூடல்  நிகழ்வில் முதலாவது வரவேற்பு உரை பொருளியியல் மாணவர் தலைமையுரை அமைப்பின் தலைவர் உ .சே. பொருளியியல் ஆர்த்தனன் பிரதமவிருந்தினர் பேராசிரியர் சிவநாதன் (யாழ்பல்கலைக்கழகம்). சிறப்பு விருந்தினர் உரை யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்திமூர்த்தி மற்றும் பொது அமைைைப்பு ஊடகமும் கலந்து சிறப்பித்தன. நடனம் நாடகம் மற்றும் கலை நிகழ்வுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டள்ளது

பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது

 

மற்றும் தமது கழகத்தின் செயற்பாட்டை தமிழ் மக்களுக்கு விளங்கப்படுத்துவதும் உலகத்திற்க்கு விளங்கப்படுத்துவதும் ஆகும்.2009 ஆண்டில் அகதி முகாமில் இருந்தே பொறியியலாளர்களின் பணி தொடங்கி விட்டது அன்றில்
இருந்து இன்றுவரை செய்த செயற்பாடுகள் ,எதிர்காலத்தில் எமது செயற்பாடுகள் என்பவற்றை உலகத் தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது.

பொறியியலாளர்கள் ,அறிவுஜீவிகள்,புத்திஜீவிகள் என பலர் இந்த கழகத்திற்காக உழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.எமது கழகத்திற்காக உழைக்கும் இவர்களுடன் நிகழ்ச்சிக்கு அரசியல் சார்பற்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,பொறியியலாளர்கள்,வைத்தியர்கள் ,சமூகத்திற்கு தொண்டு செய்பவர்கள் ஆகியோர்களை அழைத்து வருகை தந்திருந்தார்கள்.எமது புனிதமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்களாகிய உங்களின் ஆசியும் ,வாழ்த்துக்களும் எப்போதும் இருக்க இறைவனை வணங்குகின்றோம்.
“தொடர்வோம் எங்கள் புனித பணியை உறவுகளற்ற பிள்ளைகளுக்காக”    




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *