இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும் மேம்படுத்தல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகள் சாசனத்திலுள்ள நோக்கங்கள் மற்றும் விழுமியங்களை மீளவலியுறுத்தியும்,
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் ஏனைய பொருத்தமான பொறிமுறைகளினும் வழிகாட்டலின் கீழும் 2006ம் ஆண்டு மார்ச் 15ம் திகதிக்குரிய 60ஃ251 பொதுச்சபை பிரேரணையை நினைவிற்கொண்டும்,
மனித உரிமைகள் பேரவையின் 2007ம் ஆண்டு ஜுன்18ம் திகதிக்குரிய நிறுவனங்களை மேப்படுத்துவது தொடர்பான 5ஃ1 ம் மற்றும் விசேட ஆணையுடையவர்களுக்குரிய ஒழுக்கக்கோவை தொடர்பான 5ஃ2 பிரேரணைகளை நினைவுறுத்தியும்
2002ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை ஊக்குவித்தல் தொடர்பான 19ஃ2 பிரேரணையை நினைவுறுத்தியும்,
அனைத்து மக்களும் சகல மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவித்து மகிழ்வதை உறுதிப்படுத்துவதும் ஒவ்வொரு நாட்டினதும் பொறுப்பாகும் என்பதை மீளவலியுறுத்தியும் ,
நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளும் எவிவித நடவடிக்கையின் போதும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் சர்வதேச அகதிகள் சட்டம் ,மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றிற்கமைவாக உடன்பட்டு நடப்பதை மீளவலியுறுத்தியும் ,
2013ம் ஆண்டு செப்டம்பரில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பை வரவேற்றும் ,
உட்கட்டமைப்பு மீள்கட்டுமானம், கண்ணிவெடியகற்றல், உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளானவர்களில்
பெரும்பான்மையானவர்களை மீள் குடியமர்த்தியமை ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்களை ஏற்றுகொண்டு வரவேற்கின்றோம்.
இருந்தபோதிலும் குறிப்பாக நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதாரத்தை மீளாரம்பித்தல் ஆகிய விடயங்களில் இன்னமும் கணிசமான பணிகள் மேற் கொள்ளப்படவேண்டும் என்பதைக் கவனித்திற் கொண்டும் இந்த முயற்சிகளில் சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் அடங்கலாக உள்ளுர் மக்களின் முழுமையான பங்குபற்றுதலில் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் ,
இலங்கையின் கற்றுக்ககொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அதன் தீர்ப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்கை கவனத்திற்கொண்டும்
இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் அது ஆற்றக்கூடிய பங்களிப்பை ஏற்றுக்கொண்டும் ,இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டம் மற்றும் ஆணைக்குழுவின் த தீர்ப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் விடயத்தில் அதன் அர்பபணிப்புக்களைக் கவனித்திற் கொண்டும்,ஆணைக்குழுவின் தீர்ப்புக்கள் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை் அனைத்தையும் தேசிய செயற்திட்டமானது போதுமானவையில் கவனததிற் கொண்டு செயற்படவில்லை என்பதை கவனத்திற்ககொண்டும் ,
நீதிக்கு புறம்பாக இடம் பெற்றதாக மிகப்பரந்துபட்ட முறையில் குற்றஞ்சாட்டப்படும் கொலைகள் மற்றும் பலவந்தமான காணாமற்போதல் தொடர்பாக புலனாய்வு செய்யப்பட வேண்டும், இலங்கையில் வடமாகாணத்தில் இராணுவமயமாக்கலை நீக்குதல், காணித் தகராறுகளைத் தீர்ப்பதற்கான பக்கச் சார்பற்ற பொறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், ஆட்கள் தடுத்துவைக்கப்படும் கொள்கைகளை மீள மதிப்பாய்வு செய்தல் வேண்டும், முன்னைய சுயாதீன சிவில் நிறுவனங்களை வலுப்படுத்தவேண்டும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அரசியல் தீர்வைக் எட்டுதல் வேண்டும்,அனைவரதும் கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரத்தை பாதுகாத்து மேம்படுத்தவேண்டும் ,
சட்ட ஆட்சி மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் போன்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நினைவுறுத்தியும் ,
தேசிய செயற்திட்டம் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கையானது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியன மீறப்பட்டமை தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டக்கள் தொடர்பாக போதியளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதை கரிசனையுடன் குறிப்பிட்டு பலவந்தமான காணாமற் போதல்கள், நீதிக்குப்புறம்பான படுகொலைகள், சித்திரவதை, கருத்து வெளியிடும் சுதந்திரம்,அமைதியான முறையில் கூட்டங் கூடுவதற்கான உரிமை என்பவை மீறப்படுதல் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக அங்கத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்கள் , நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கெதிரான அச்சுறுததல்கள், சமயம் அன்றேல் நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுகின்ற பாராபட்சங்கள் அடங்கலாக ,லங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை குறித்து தொடந்தும் வருகின்ற அறிக்கைகள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தியும்,
நல்லிணக்கத்திற்கு இன்றியமையாத அம்சமாக அமைந்துள்ள அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மக்களும் தமது மனித உரிமைகளை முழுமையாக அனுபவித்து மகிழ்வதை உறுதிப்படுத்துவது
அடங்கலாக தனது மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என நாம் கோரிநிற்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை சேர்ந்த தொழில்நுட்ப தூதுக்குழுவின் ஒரு விஜயத்திற்கு வசதியேற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் ஆணையாளரின் அலுவலகத்துடனான கருத்தாடல்களையும் ஒத்துழைப்புச் செயற்பாடுகளையும் அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியன மீறப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பகரமான மற்றும் சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்த கோரிக்கையையும் குறிப்பிட்டு,
1.இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டையும் மேம்படுத்துவதற்காக தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகயை வழங்குவதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையையும் அதில் அடங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களையும் குறிப்பாக நிலைமாற்று நீதி தொடர்பில் உண்மையைக் கண்டறியும் கட்டமைப்பை ஸ்தாபித்தல் என்பவற்றை வரவேற்கின்றோம்.
2. மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். அத்தோடு சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியன மீறப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் சுயாதீனமான நம்பந்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோருகின்றோம்.
3. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செயற்திறான முறையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீள வலியுறுத்துகின்றோம். அத்தோடு அது தொடர்பான சட்டக் கடப்பாடுகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து விதமான மேலதீக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி சமத்தும் பொறுப்புக் கூறும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகரமான மற்றும் சுயாதீன நடவடிக்கை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறும் கோருகின்றோம்.
4. விசேட ஆணையுடையர்வர்கள் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதுடன் அவர்களது நுழைவுக்கான அனுமதி வழங்கல் மற்றும் அழைப்புக்களைக் கொடுத்தல் உட்பட ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்குமாறு கேட்கின்றோம்.
5. மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராய்ந்தும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தையும் தொடர்புபட்ட விசேட நடைமுறை ஆணைகொண்ட தரப்பினரையும் ஊக்குவிக்கின்றோம்.
6. விசேட நடைமுறை ஆணைகொண்ட தரப்பினர்களது கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வின் போது வாய்மூல தகவலளிப்பையும் தற்போதைய பிரேரணையின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து 25வது அமர்வின் போது பூரணமான அறிக்கையையும் சமர்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கேட்டுக்கொள்கின்றோம்.