வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில். இரத்ததான முகாமில் 30பேருக்கு மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர். 21.01.2018
இதில் இளைஞர் யுவதிகளும் இரத்ததான வழங்கிள்ளனர்.
இங்கு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில். பணியாற்றும் தாதியர்களும் இரத்ததானம் வழங்கியுள்ளர் இவர்கள் கடந்தகாலம் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் அவர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரை தங்களின் தாயைவிட ஒரு படி மேல் நேசித்து பராமரித்ததை நான் நேரில் கண்டேன்.
அத்தோடு அவரை அனுமதித்து வைத்தியம் பார்த்த டாக்டர் க. மயிலேறும்பெறுமாள் அவர்களையும் மறந்திட முடியாது
அம்மாவை தடுப்பில் இருந்து எடுத்து அவரை அவர் வாழ்ந்த ஊர்வரைக்கும் கொண்டு வந்து அவரை சிறிது காலம் வாழ வைத்த எம் கே சிவாஜிலிங்கத்தையும் மறந்திட முடியாது
அத்தோடு அவ்வப்போது மேலதிக தேவையானவையும் தலைக்கு நல்லெண்ணை காச்சி வடித்து தலைக்கு வைத்து வாரிவிட்ட அகமணிதேவர் மனைவி தேவி அம்மாவையும் மறந்திட முடியாது. நாம் கண்டவைகளை மறந்திடமுடியாது ஆகையாலே இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.