நாடு திரும்பினால் நரகத்திற்கு அனுப்புவோம்: முஷாரப்பிற்கு தலிபான்கள் எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

நாடு திரும்பினால் நரகத்திற்கு அனுப்புவோம்: முஷாரப்பிற்கு தலிபான்கள் எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் திரும்பவுள்ள மாஜி ஜனாதிபதி முஷாரப்பை தீர்த்துக்கட்டுவோம் என்று தலிபான்கள் எச்சரிக்கை மிரட்டல் விடுத்துள்ளனர்.

முஷாரப்பை கொல்ல தற்கொலைப்படையினர் தயாராகி விட்டனர் என்றும் அவரை மேலோகத்தில் இருக்கும் நரகத்திற்கு அனுப்புவோம் என தலிபான்கள் ஆவேசமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளதனால் நாளை அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: முஷாரப் பாகிஸ்தான் திரும்பும் நேரத்தில் அவர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்வோம். இதற்கென சிறப்பு படையினர் தயாராகி விட்டனர் என்றும் அவர் கொல்லப்படுவது உறுதி என கூறியுள்ளனர்.

இந்த வீடியோவில் பேசியிருப்பது ஏற்கனவே முஷாரப்பை கொல்ல திட்டமிட்டு முயற்சி செய்த அட்னன் ரஷீத் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தாக்குதல் நடந்த பின்னர் முஷாரப் தலிபான்களை ஒழிக்க கடும் முயற்சி மேற்கொண்டவர் என தலிபான்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.

சவூதி அதிகாரிகள் அச்சம் பாகிஸ்தானின் மாஜி ஜனாதிபதி முஷாரப் நாடு கடத்தப்பட்டது முதல் லண்டன் மற்றும் சவூதியில் தஞ்சம் புகுந்துள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து அவர் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்திருந்தார்.

சவூதி அதிகாரிகள் சிலரும் இவரது பாகிஸ்தான் பயணம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்றும் இந்த பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.