வல்வெட்டித்துறை மீனவர்களை கோடியக்கரைக்கு அழைத்துச் சென்ற கடல் காற்று.

வல்வெட்டித்துறை மீனவர்களை கோடியக்கரைக்கு அழைத்துச் சென்ற கடல் காற்று.


இந்தியா, கோடியக்கரைக்கு சென்றடைந்த இலங்கை மீனவர்களிடம் இருவரிடம் சுங்கத் துறையினர், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் சந்துரு (20), சுமணன் (22) ஆகிய இருவரிடமே விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இருவரும் கடந்த 23ஆம் திகதி மாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அவர் கூறியுள்ளனர்.

இதை அடுத்து, காற்றின் திசையில் படகைச் செலுத்திய அவர்கள் இன்று (25) காலை கோடியக்கரை பகுதிக்கு சென்றடைந்துள்ளார்.

அவர்கள் பின்னர் இந்திய சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அவர்கள் படகில் வைத்திருந்த மீன்கள் ஏலம் விடப்பட்டன. அவை ரூ.4,950க்கு ஏலம் போனது.

Leave a Reply

Your email address will not be published.