ஆசியப் பகுதியில் சீனா தன்னை ஒரு வல்லரசாக காட்டிக்கொள்ள முயன்று வருகிறது.
அதன் நடவடிக்கையாக பக்கத்து நாடுகளை தனது ஆயுதப்பலத்தால் மறைமுகமாக மிரட்டவும் செய்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து 24, சூ-35 வகை ஜெட் போர்விமானங்களையும், 4 லாடா வகை நீர் மூழ்கி கப்பல்களையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் இரண்டு கப்பல் ரஷ்யாவிலும், இரு கப்பல் உள்நாட்டிலும் கட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 வருடங்களில் சீனாவில் நடந்த பெரிய அளவிலான இராணுவத்தளவாட கொள்முதல் இது என்று சொல்லப்படுகிறது.
இப்பிராந்தியத்தில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்தி வருவதால், அதை சமாளிக்கும் நோக்கில் சீனாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.