காங்கிரஸ் கட்சியின் திருச்சி, கரூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கலந்து கொள்ள இருந்தார். இதற்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர்களை மாணவர்கள் சேதப்படுத்தினர். ஞானதேசிகன் திருச்சியை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் மாணவர்களை தாக்கி உள்ளனர் .
இதில் 30 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . 7 மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை என் மாணவர்கள் தெரிவித்துல்ல்லானர் . இந்த தாக்குதல் நடத்திய காங்கிரஸ் காட்சியை சேர்ந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .