இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்கு விசேட பொறிமுறைமை ஒன்று அவசியம் என சர்வதேச அனர்த்தக் குழுவின் இலங்கைப் பணிப்பாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கவும் அரசாங்கம் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் நீண்ட காலமாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வனை வழங்க அரசாங்கம் முனைப்புக் காட்டத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணை நடாத்த அரசாங்கம் முன்வரவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.