மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள்.
இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என்றார்.
இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால், மாணவர்கள் தாக்குத நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.
இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள், வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சி பேனர்களை கழற்றி, அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.