தமிழகத்திலிருந்து சுற்றுலா விசா அனுமதியில் வந்துள்ள அனைவரையும் வெளியேற்ற வேண்டும் – ஹெல உறுமய

தமிழகத்திலிருந்து சுற்றுலா விசா அனுமதியில் வந்துள்ள அனைவரையும் வெளியேற்ற வேண்டும் – ஹெல உறுமய
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசா அனுமதியில் வந்துள்ள அனைத்து தமிழக வாசிகளை இலங்கையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ராஜதந்திர ரீதியில் அதிருப்தியை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் தனி தமிழீழத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தெரிவித்துள்ள அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் இலங்கைக்குள் வர அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.  அத்துடன் அவர்களுக்கு இலங்கையில் சொத்துக்கள் இருந்தால், அது குறித்து கண்டறிந்து அவற்றை அரசுடமையாக்க வேண்டும் எனவும் தேரர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கு எதிரான தூண்டுதல்களை ஜெயலலிதா மற்றும் கருணாநிதி  ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுத்தி வரும் நிலையில், புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன், சீமான ஆகியோர் சிங்கள பௌத்த விரோத தாக்குதல்களை அதிகரித்து வருகின்றனர் என்பதை காணமுடிகிறது எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.