பிரிட்டனில் இளவேனிற்காலம் தொடங்கும் நேரத்தில் கடும் குளிர்காற்றும், பனிப்பொழிவும் மக்களை வாட்டி வருவதாகவும், இந்நிலை வருகின்ற ஏப்ரல் மாதம் வரை தொடரலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பனியின் தாக்கத்தினால் தற்பொழுது ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தடை திசை மாறி, ஆப்பிரிக்காவின் வடபகுதியை நோக்கி வீசிக்கொண்டிருப்பதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் பரவலான உறைய வைக்கும் பனிப்பொழிவும், கிழக்கு திசையிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றும் இனியும் தொடரும் என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.