Search

மனநிலை பாதிப்படைந்து உயிர்விட்ட அந்த அரசியல் கைதியின் மனைவியின் இறுதிக்கிரியைக்காக மூன்று மணித்தியாலங்கள் மட்டும் வழங்கப்பட்டு இரு பிள்ளைகளையும் ஆரத்தழுவி அநாதரவாகவிட்டு மீள அவனை சிறைக்குள் தள்ளும் கொடிய சிங்களப் பேரினவாத அரசு

கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பளித்து,
அவர்கள் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படுவர் என சர்வதேசத்திடம் கூறிய சிறிலங்கா சிங்கள அரசு யுத்தம்முடிந்து இன்று ஒன்பது வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் அரசியல் கைதிகளை விடுவிக்காது பலரை ஆயுட்தண்டனைக் கைதிகளாக குற்றத்தண்டனை வழங்கி தனது அதிகாரவக்கிரத்தை காண்பித்துள்ளது என்பதற்கான ஆதாரமே இன்றைய இந்த அரசியல்கைதியின் துயரம் தோய்ந்த நிலை.

சிறிலங்கா இராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்டு விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டை சுமத்தி ஆயுட்தண்டனை வழங்கி தீர்பபளித்த நிலையில் மனநிலை பாதிப்படைந்து உயிர்விட்ட அந்த அரசியல் கைதியின் மனைவியின் இறுதிக்கிரியைக்காக மூன்று மணித்தியாலங்கள் மட்டும் வழங்கப்பட்டு
இரு பிள்ளைகளையும் ஆரத்தழுவி அநாதரவாகவிட்டு மீள அவனை சிறைக்குள் தள்ளும் கொடிய சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களுக்கு வழங்கும் தீர்வு இதுதான்.




Leave a Reply

Your email address will not be published.