Search

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கானோர் .

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டம்    

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் பள்ளிக்குள் புகுந்து மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் போராட்டன் வெடித்துள்ளது. துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அமைந்துள்ள பென்னிஸில்வேனியா தெருவில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஊர்வலம்” என்ற பெயரில் இந்த போராட்டம் நடந்தது. துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் இதில் வலியுறுத்தப்பட்டது.

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *