Search

ரஷ்ய ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து; தீயில் கருகி 37 பேர் பலி!

ரஷ்ய ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து; தீயில் கருகி 37 பேர் பலி!

37 killed in russian mall blaze

ரஷ்ய தீ விபத்து

மாஸ்கோ: மால் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து, 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் கெமிரோவா நகரில் ஸிம்ன்யாயா விஷ்ன்யா( Zimnyaya Vishnya) என்ற பிரபல ஷாப்பிங் ஒன்று செயபட்டு வருகிறது.

இதன் 4வது மாடியில் 1,600 சதுர மீட்டர் கொண்ட இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. உடனே மற்ற தளங்களுக்கும் தீ பரவியது.

இதனால் ஜன்னல்கள் வழியே நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

இந்த சம்பவத்தில் 40 குழந்தைகள் உட்பட 69 பேரை காணவில்லை என்று கூறப்பட்டது.

முதல்கட்டமாக 4 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 42 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 37ஆக உயர்ந்துள்ளது.

30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2013ஆம் ஆண்டு, 23,000 சதுர மீட்டரில் ஸிம்ன்யாயா விஷ்ன்யா( Zimnyaya Vishnya) என்ற மால் தொடங்கப்பட்டது.

இங்கு கடைகள், பவுலிங் கிளப், குழந்தைகள் மையம், தியேட்டர், பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மேலும் 250 கார்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியும் உண்டு. இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்ட வீட்டு விலங்குகளும் பலியானதாக கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *