தந்தை வெல்வாவின் 115 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகள் நேற்றுக் காலை யாழ் நகரில் இடம்பெற்றது.
யாழ் நகரிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மலர் மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ,ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டமைப்பின் பிரதேச மற்றும் நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களும் மற்றும் தொண்டகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு அஞ்சல செலுத்தினர்.