வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்குப் பாதிப்பே உண்டாகும். இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பானது. எனவே எமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்கோம். நாடெங்கும் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் இவ்வாறு பேரினவாத அமைப்புக்கள் மிரட்டல் விடுத்துள்ளன.
வெறும் மிரட்டலோடு மாத்திரம் நிற்காமல் வடமாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி நாடளாவிய ரீதியில் பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் கடும் போக்குடைய சிங்கள அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கான நடவடிக்கைகளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றது எனவும், சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் முதற்கட்டப் போராட்டங்களை ஆரம்பிப்பதற்கு மேற்படி அமைப்புகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரியவருகின்றது.
வடமாகாணசபைத் தேர்தலை செப்ரெம்பர் மாதமளவில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டுவரும் நிலையி லேயே, வடக்குத் தேர்லுக்கு எதிர்ப் புத் தெரிவித்து போராட்டங்களை நடத்துவதற்கு சிங்கள அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இது குறித்த அறிவிப்பை இன்னும் சில நாள்களில் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது. இதற் கென விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றும் நடத்தப்படவுள்ளது.
வடக்குத் தேர்தல் எதிர்ப்புப் போராட்ட விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய ஒருங் கிணைப்பு ஒன்றியத்தின் உறுப்பினரொருவர் தெரிவித்ததாவது: “வடக்குத் தேர்தலை நடத்தக்கூடாது என நாம் அரசுக்குப் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந் தோம். ஆயினும் அது குறித்துக் கவனம் செலுத்தாது வடக்குத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முனைப் புக் காட்டுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஜெனிவாவில் ஒன்றையும், இங்கு வேறொன்றையும் அரசு கூறுகின்றது. வடக்குத் தேர்தலை நடத்துவதானது 13ஆம் திருத் தத்தை வழங்குவது போன்றதாகும். எனவே, அரசு கண்ணை விழித்துக் கொண்டே குழியில் விழக்கூடாது.
வடக்குத் தேர்தலை நடத்தக் கூடாது என நாம் கூறியதை அரசு சாதகமாகப் பரிசீலிக்கத் தவறி யுள்ளதால் சிங்கள மக்களை அணி திரட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக் கும் போராட்டங்களில் இறங்கவுள் ளோம். அனேகமாக புத்தாண் டுக்குப் பின்னர் இந்தப் போராட் டங்கள் நிகழும்” என்றார்.