Search

சிவநாதன் நிமலன் ( குட்டி) ஞாபகார்த்த உதைபந்து சம்பியனாகியது நேதாஜி அணி

சிவநாதன் நிமலன் ( குட்டி) ஞாபகார்த்த உதைபந்து சம்பியனாகியது நேதாஜி அணி

சிவநாதன் நிமலன் (குட்டி) ஞாபகார்த்தமாக ரேவடி விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரை நடாத்தி வந்தது.

அந்த வகையில் இன்று (15/04/2018) இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகமானது மோதியது.

மிகவும் விறுவிறுப்பான இப்போட்டியில் முதல்பாதியாட்டத்தில் நேதாஜி அணியானது 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.


இரண்டாம் பாதியாட்டத்தில் ரேவடி அணியானது மிக வேகமாக விளையாடியது. அதற்கேற்ப ஆட்டம் முடிய ஒரு சில நிமிடங்களே உள்ள நிலையில் கிடைத்த தண்ட உதை வாய்ப்பை கோலாக மாற்ற தவறியமையால் போட்டியை நேதாஜி அணியானது 2-1 என்ற கோல்
கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தனர் .


இச்சுற்றுத்தொடரின் தொடர் ஆட்ட நாயகனாக ரேவடி விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த சீலனும் ,

சிறந்த பின்கள வீரராக அதே அணியைச்சேர்ந்த ராஜ் ,

சிறந்த கோல்காப்பாளராக நேதாஜி அணியைச்சேர்ந்த அஜந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்..

அத்துடன் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக நேதாஜி அணியின் கோபி தெரிவு செய்யப்பட்டு வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *