சமகாலத்தில் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் ரோபோ தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணமாக பறக்கும் தும்பி உருவாக்கப்பட்டுள்ளது.
BionicOpter Robotic Dragonfly என அழைக்கப்படும் இந்த பறக்கும் தும்பியினை Festo எனப்படும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 63cm நீளமான இறக்கைகளைக் கொண்ட இவை காற்றினை எதிர்த்து பறக்கும் ஆற்றலை உடையதாகவும் தேவைப்படின் இறக்கைகளை பயன்படுத்தாது அந்தரத்தில் நிற்கும் ஆற்றல் உடையவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவற்றினை 2.4 GHz அதிர்வெண் கொண்ட வயர்லெஸ் சமிக்ஞையை வெளிப்படுத்தும் ரிமோட் அல்லது ஸ்மார்ட் கைப்பேசிகளினால் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வகை தும்பிக்கள் எதிர்காலத்தில் இராணுவ புலனாய்வு வேலைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.