வல்வை கல்வி அபிவிருத்துச்சங்கத்திற்கு (VEDA) கல்வி நலன் புரிச்சங்கம் ( ஐ.இ) கிளையானது பிரதான பங்களிப்பிற்கு முன்வந்துள்ளது. இதற்கமைய, வல்வை நலன் புரிச்சங்கம் (ஐ.இ), வல்வை கல்வி அபிவிருத்துச்சங்கத்திற்கும் மற்றும் வல்வை ஒன்றியத்திற்கும் (வல்வெட்டித்துறை) இடையில் 2013.03.24 இல் ஒப்பமிட்டு எட்டப்பட்ட உடன்பாட்டிற்கமைய, வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) வல்வை ஒன்றியம் (வல்வெட்டித்துறை) ஊடாக VEDA கல்வி நிலையத்திற்கான மாதாந்தக் கொடுப்பனவுகளை 2013 பங்குனி மாதம் முதல் வழங்க ஆரம்பித்துள்ளது.
VEDA கல்வி நிலையத்தின் நிதி தேவைப்பாட்டினை பூர்த்தி செய்கின்ற பொறுப்பினை ஏற்றுக்கொண்டமைக்காக வல்வை நலன்புரிச் சங்க(ஐ.இ) நிர்வாகக் குழுவினர் மற்றும் வல்வை ஒன்றியம் (வல்வெட்டித்துறை) நிர்வாகத்தினருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக VEDA அறிவித்துள்ளது .
இதன் விரிவான அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.