அல்ஜீரியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கடாபியின் மகள்

அல்ஜீரியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கடாபியின் மகள்

லிபியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக அந்நாட்டின் அதிபர் முவம்மர் கடாபி கடந்த 2011-ம் ஆண்டு புரட்சிப் படையினரால் கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.கடாபியின் ஒரே மகள், ஆயிஷா கடாபி. இவரது கணவர் மற்றும் 2 குழந்தைகள் புரட்சிக்காரர்கள் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர். கடாபியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆயிஷா அல்ஜீரியா நாட்டில் அரசியல் தஞ்சமடைந்தார். அவர் தங்குவதற்கு அல்ஜீரியா அதிபரின் மாளிகை வளாகத்திற்குள் பாதுகாப்பான வீடு வழங்கப்பட்டது. அங்கு குடியேறிய பின்னர், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த ஆயிஷாவின் போக்கில் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டது.

தனது பாதுகாவலர்களை அடித்து, உதைப்பது. அல்ஜீரிய அதிபரின் ஓவியத்தை நாசப்படுத்துவது, வீட்டின் பொருட்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற செயல்களை ஆயிஷா தொடர்ந்து செய்து வந்தார். அதிபர் மாளிகை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், அவரது போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனையடுத்து, அல்ஜீரியாவில் இருந்து ஆயிஷா கடாபி விரட்டப்பட்டதாகவும் தற்போது ஓமன் நாட்டில் அவர் தஞ்சமடைந்து இருப்பதாகவும் அல்ஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.