குரங்குகளால் வளர்க்கப்பட்ட பிரிட்டன் பெண்

குரங்குகளால் வளர்க்கப்பட்ட பிரிட்டன் பெண்

பிரிட்டனிலுள்ள பிராட்பேர்டு நகரை சேர்ந்த மரீனா சேப்மேன்(63) என்பவர் குழந்தையாக இருந்தபோது சிலர் இவரை கடத்திச் சென்று கொலம்பியாவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அனாதையாக விட்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை குரங்கு கூட்டம் தத்தெடுத்து தன் குழந்தை போன்று பாலூட்டி சீராட்டி வளர்த்துள்ளது. இதனால் அவர் குரங்கு போன்றே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை தரையில் ஊன்றியபடியே நடந்து வளர்ந்துள்ளார்.

மேலும், குரங்குகள் போன்று இவரும் மரத்துக்கு மரம் தாவியபடி வாழ்ந்துகொண்டு உடம்பில் துணி எதுவும் இல்லாமல் நிர்வாணமாகவே குரங்குகளுடன் சுற்றித் திரிந்துள்ளார்.

இதற்கிடையே ஒரு சில்லறை வியாபாரி ஒருவர் இவரை காட்டில் கண்டுபிடித்து ஊருக்குள் அழைத்து வந்தபொழுது அவருக்கு பேச தெரியாது. பின்னர் ஒரு வீட்டில் பெண்ணிடம் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்குதான் மரீனா பேசவும், எழுத படிக்கவும் கற்றுக் கொண்டார்.

தற்போது, தனது சுய சரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதற்க ‘தி கேர்ள் வித் நோ நேம்’ என பெயரிட்டுள்ளார்.

அடர்ந்த காட்டில் நடந்த தனது வாழ்க்கை போராட்டம் குறித்தும், அதில் இருந்து மீண்டு மனித வாழ்க்கைக்கு திரும்பியதையும் திகிலுடன் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.