தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தனித்தமிழீழமே தீர்வாகும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.சென்னையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டக் கல்லூரி மாணவர் ஆர்.முருகானந்தம் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இன படுகொலை. அதற்கு நமபத்தகுந்த சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதுட் அந்த படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும்.
தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு. அதற்கு ஐ.நா. சபை சார்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கும் அதே வேளை இலங்கை அரசு உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலை நிறுத்தும் அதே வேளையில் கட்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும்.
தமிழ் ஈழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும். ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்படடுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.