அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பிராடன்டன் நகரை சேர்ந்தவர் லூயிஸ் பிரிக்னோனி (41). மனைவி, பிள்ளைகள் உள்ளனர். வீட் டில் நாய்கள் வளர்க்கிறார். சற்றுமுரண்டு பிடிக்கும் நாய் ஒன்றை கூண்டில் அடைத்திருந்தனர்.
லூயிசின் மகன் பெர்னாண்டோ (11) அதனுடன் விளையாட ஆசைப்பட்டு கடந்த வெள்ளியன்று கூண்டை திறந்தான். திடீரென பாய்ந்து வெளியே வந்த நாய், அவனது கையை கடித்தது. விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தது.
பெர்னாண்டோ அலறினான். அருகில் இருந்த அவனது அண்ணன் ஓடி வந்து நாயின் மண்டையில் ஓங்கி அடித்தான். பிடியை விட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது.
இதற்கிடையில், சத்தம் கேட்டு லூயிஸ் ஓடிவந்தார். ரத்த வெள்ளத்தில் பெர்னாண்டோ துடிப்பதை பார்த்து பதறினார். அவனது கையில் சுண்டு விரல் துண்டாகி இருந்தது.
நாய் கடித்துவிட்டதாக மகன் கூறினான். விரலை நாய் விழுங்கிவிட்டதை அறிந்துகொண்டார். உடனே ஹெலிகாப்டர் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லிவிட்டு, உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்தார். கொல்லைப்புறத்துக்கு சென்றார்.
அங்கு தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த நாயை சுட்டார். நாய் இறந்து விழுந்தது. கத்தியை எடுத்தவர், நாயின் வயிற்றை அறுத்தார்.
நாயின் குடலில், சின்னாபின்னமான நிலையில் மகன் பெர்னாண்டோவின் கை விரல் இருந்தது. அவசர அவசரமாக அதை எடுத்தவர், பத்திரமாக பேக் செய்து, ஆம்புலன்சில் மகனுடன் அதையும் அனுப்பி வைத்தார்.
முதலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட பெர்னாண்டோ, பின்னர் மேல் சிகிச்சைக்காக டாம்பா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நரம்புகள் அதிகம் சேதம் அடைந்திருந்ததால், அந்த விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியவில்லை என்று டாக்டர்கள் கூறினர்.
மகனின் விரலை மீட்க வேண் டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது. அதனால்தான் நாயை சுட்டேன் என்று லூயிஸ் கூறியுள்ளார்.