தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துச் சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
*இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. இது குறித்து நம்பத் தகுந்த சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
*ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு. இதனை ஐக்கிய நாடுகள் சபை பொதுவாக்கெடுப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கையுடான உறவை இந்தியா கண்டிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்.
தமிழீழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.