உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்…….வாருங்கள் பார்போம்.
உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.
வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.
தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.