முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது.

நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார்.

“தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி என்பதோடு, ஒரு மாவீரரின் தந்தை என்பதோடு, ஒரு மகனை முள்ளிவாய்க்காலில் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் யார் செய்வது என அடிபட்டுக் கொண்டிருக்கும்

இன்றைய சூழலில் இப்படியான உயர்வான உயர்வான மனிதர்கள் வாழ்வது பலருக்கு எடுத்துக் காட்டு என்பதுடன் உயிர்களைப் பிரிந்த உறவுகளுக்கு இப்படி நல்ல உள்ளங்கள் ஓரளவு ஆறுதலாகும் என பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.