Search

25.07.1983 அன்று வெலிக்கடைச்சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த மாவீரகள் உட்பட 35தமிழ் அரசியல் கைதிகளின் 35ம் ஆண்டு நினைவு நாள்

25.07.1983 அன்று வெலிக்கடைச்சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த மாவீரகள் உட்பட 35தமிழ் அரசியல் கைதிகளின் 35ம் ஆண்டு நினைவு நாள்

மாவீரன் தங்கத்துரை
நடராசா தங்கவேல்
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்

.

மாவீரன் ஜெகன்
கணேசானந்தன் ஜெகநாதன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்

மாவீரன் குட்டிமணி
செல்வராசா யோகச்சந்திரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

25.07.1983 அன்று வெலிக்கடைச்சிறையில் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த தனிகுழு மாவீரர்களின் 35ம் ஆண்டு நினைவு நாள்

1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த “குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்” ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் “தமிழ் ஈழத்தை” காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது “கண்களை சிங்களக் காடையர்கள்” பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.

யார் அந்த “குட்டிமணி” ??

குட்டிமணி என்கிற செல்வராசா
யோகச்சந்திரன்
உங்கள் யாவருக்கும் இந்தப் பெயரைக் கேட்டால் உடனே எண்ணத்திற்கு வருவதென்னவோ பசங்க படத்தில் வரும் சின்னப் பையன் கதாபாத்திரம் தான். அந்த திரைப்படம் மட்டுமல்ல மீண்டுமொருமுறை கோலி சோடா என்ற படத்திலும் அதே பையன் அதே பெயரில் நடித்துள்ளார். அதைப் பார்த்து அந்தக் கதாபாத்திரம் செய்த நகைச்சுவைக்கும் பெயருக்கும் வாய்விட்டு சிரித்திருப்பீர்கள். இல்லாட்டியும் ஒரு கேளிக்கைக்குண்டான பெயராகத்தான் இருந்திருக்கும். இருக்கின்றது. அதுவும் ஏதே ஒரு இரட்டைப் பொருளோடு. இப்போது ஒருவன் குட்டிமணி என்ற பெயரை வைப்பாரானால் எதிர் நீச்சல் திரைப்படத்தில் வருவது போல தன்னை எல்லோரும் கேலி செய்கிறார்களென பெயரை மாற்றியிருப்பார். இது ஒன்றும் பெரிதல்ல என்கிறீர்களா? அந்தப் பெயரைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும்தான் இந்தக் கட்டுரை.

ஆனால் உண்மையில் அந்த குட்டிமணி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறே மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் குட்டிமணி என்றொருவர் இந்த உலகில் வாழ்ந்து மறைந்துள்ளார். அதுவும் கடந்த இருபதாம் நூற்றாண்டில். அதுவும் கூப்பிட்டால் கூட கேட்கும் தூரத்தில். தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றொழிக்கப்பட்ட அதே ஈழத்தில்.

செல்வராசா யோகச்சந்திரன் என்பதே அவரது இயற்பெயர். ஈழத்தின் காந்தி என்வழைக்கப்பட்ட தந்தை செல்வாவிற்குப் பின் இளைஞர்கள் மத்தியிலெழுந்த ஓர் எழுச்சியின் காரணமாக உண்டான பல்வேறு அமைப்புகளுக்கு முன்னோடியானதுதான் தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organisation – TELO). இந்த அமைப்பை நடராசா தங்கதுரையுடன் சேர்ந்து 1960களில் ஆரம்பித்தவர்தான் குட்டிமணி.

வழக்கம்போலவே இவர்களை தீவிரிவாதிகள் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைத்து இப்போராட்டத்தை முடக்குவதுதான் சிங்களத்தின் நோக்கமும் குறிக்கோளும். அதே போலவே குட்டிமணியையும் தங்கதுரையையும் கைது செய்து பலாலி சிறையிலடைத்தனர். ஆனால் இவர்களோ அங்கிருந்து தப்பித்தனர். தவறுதலாக தங்கதுரைக்கு காலில் அடிபடவே குட்டிமணி தங்கதுரையை தூக்கிக் கொண்டு கிட்டதட்ட பத்து கி.மீ ஓடி இவரும் தப்பித்து தங்கதுரையையும் காப்பாற்றியுள்ளார். இந்த வரலாற்று நிகழ்ச்சியெல்லாம் இன்னமும் பார்த்து வியந்து நிற்பவர்கள் பலருண்டு. இவரது உடற்பலத்திற்கு இதை எடுத்துக்காட்டாகவே சொல்வார்கள்.

அப்போதை காலகட்டத்தில் தந்தை செல்வாவால் நிறுவப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (Tamil United Liberation Front – TULF) என்ற அரசியல் இயக்கத்தின் வட்டுக்கோட்டை பிரதிநிதியான திருநாவுக்கரசு 1982-ல் இறந்தபோது அந்த இடத்திற்கு குட்டிமணியை நிறுத்தினர். அந்த நேரத்தில் அவர் சிறையிலிருக்கவே அவரை பதவியேற்றுக்கொள்ள சிங்கள சிறை அதிகாரி மறுத்துவிட்டார். ஏனென்றால் அந்தத்தருணம் அவரொரு தூக்கு தண்டனைக் கைதியாக இருந்தார் ஒருவருடமாக.

இவருக்கு தூக்குதண்டனை வழங்கும் போது நீதிபதி அவர்கள் அவரது கடைசி ஆசை என்னவென்று கேட்டபோது, குட்டிமணி சொன்ன பதில் அவர்களை உருட்டிப்போட்டது. உலகத்தில் எந்தவொரு தலைவனும் சொல்லியிருக்க முடியாத பதில். சாமானியனாக இருந்திருந்தால் குடும்பத்திற்காக சொல்லியிருப்பான். ஆனால் இவரோ
“நான் தூக்கில் இறந்த பின்பு தனது இரண்டு கண்களையும் கண்பார்வை இல்லாத ஒரு தமிழருக்கு தானாமாக வழங்கவேண்டும். என்னால் பார்க்க முடியாமல் போகும் ஈழத்தை எனது கண்களாவது பார்க்கட்டும்”
என்று கூறினார். இவரது பதிலைக்கேட்டு அந்த நீதிமன்றத்திலிருந்த அத்துனை பேருக்கும் புரிந்திருக்கும் தமிழர்களுக்கான தனி ஈழம் எவ்வளவு முக்கியமானது என்று. அதன் பிறகே அவர் கொழும்பில் உள்ள வெலிக்கட சிறைக்கு தூக்குதண்டனையை நிறைவேற்ற மாற்றப்படுகிறார். அங்கேதான் அவருக்கான தூக்கு மேடை தயாரானது.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது. தங்கதுரை, செகன் மற்றும் குட்டிமணி
1983 ஆம் வருடம் சூலை மாதம் 24-ம் நாள் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்க ஆரம்பமாகின்றன. அவை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகின்றன. சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளால் சிங்களவர்கள் தூண்டப்பட்டு கொழும்பு நகரம் முழுவதும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. கத்திகளோடும் கம்பிகளோடும் தடிகளோடும் தீப்பந்தங்களோகும் கூட்டம் கூட்டமாக நகரம் முழுவதுமுள்ள அத்துனை தமிழர் சார்ந்த வீடுகளும் கடைகளும் எரியூட்டப்பட்டன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தாண்டவமாடின. தமிழ்ப் பிள்ளைகள் தீக்களில் தூக்கி வீசப்பட்டன. கற்பு பாழாக்கப்பட்டன. ஆண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதிகளில் ஓடவிடப்பட்டனர். இவையெல்லாம் சரியான பழிவாங்கலாகவே சிங்களர்கள் நினைத்தனர். ஏனென்றால் தமிழ் இளைஞர்களால் சரியாக ஒரு மாததிற்கு முன்புதான் இராணுவத்தின் வாகனமொன்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.

“கருப்பு சூலை” என்று தமிழர்கள் வரலாற்றில் சொல்லப்படும் இந்தக் கலவரத்தின் இரண்டாம் நாள்தான் கலவரம் வெலிக்கட சிறைக்குள்ளும் பரவ பெருவாரியான சிங்களக் கைதிகள் இருந்த அந்தச்சிறையில் தமிழர் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் 24பேரும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் குட்டிமணியும் ஒருவர். சிறைக்காப்பாளரே இந்த மோதலைத் தூண்டிவிட்டு தமிழர்களை அழிக்கவும் வழிவகைசெய்யப்பட்டது. எந்தக் கண்கள் பிறக்கப்போகும் தமிழீழத்தை பார்க்க விரும்பினவோ அதே கண்கள் இரும்பு கம்பிகளால் தோண்டி எடுக்கப்பட்டன. உயிரோடு இருக்கும் போதே. உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அனைத்தும் சிறையினுள்ளே இருந்த புத்த சிலைக்கு முன் படைக்கப்பட்டன.

வெலிக்கட சிறையின் முன்புறத்தோற்றம்

தனது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய எந்த மனிதரையும் அதே இனம் இருபதே ஆண்டுகளில் தனது திரைப்படங்களில் அந்தப் பெயரை இப்படிக் கொச்சைப்படுத்த முடியாது. மறைக்கப்பட்ட இந்த வரலாற்றை தயவுசெய்து மற்றவர்களிடம் எடுத்துச்சொல்லுங்கள்.

ஒரு குட்டிமணியை அவர்கள் அழித்திருக்கலாம். அவருடைய பெயரைத்தாங்கி இன்னும் என்னைப்போல் இன்னும் ஓராயிரம் குட்டிமணிகள் வருவார்க:ள். மலரவிருக்கும் தமிழீழத்தைப் பார்ப்பார்கள்.
Leave a Reply

Your email address will not be published.