35வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டம்.
இறுதியாட்டத்தில் தீருவில் அணி.
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட தொடரின்
அரையிறுதியாட்டத்தில் சைனிங்ஸ், தீருவில் அணிகள் மோதின.இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல்களை பதிவு செய்தன. போட்டி 1:1 என நிறைவடைய வெற்றியை தீர்மானிக்க சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில்1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது தீருவில் அணி.