35வயதுக்கு மேற்பட்ட உதைபந்தாட்ட தீருவில் அணி சம்பியனாகியது.
ரேவடி அணியுடனான இறுதியாட்டத்தில் 7:1 என்ற கோல்கணக்கில் சம்பியனாகியது தீருவில்..
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் தீருவில் எதிர் ரேவடி அணிகள் மோதின.
சண்முகதாஸ் அவர்களின் சிறப்பான ஆட்டத்துடனும் இரட்டைக் ஹட்ரிக் கோல்களுடனும் தீருவில் அணி 7:1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
தீருவில் சார்பாக சண்முகதாஸ் அவர்கள் 6 கோல்களை (தொடரில் 3போட்டியில் 10 கோல்கள்) போட்டு ஆட்டநாயகன் தொடராட்ட நாயகன் விருதினை வென்றார்.
.