வல்வை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட அணி வெற்றி 4:00 என்ற கோலினால் வெற்றி
உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் 2018 ம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து வரணி நீயூ ஸ்ரார் வி.கழகம் மோதியது.
இன்றைய விறு விறுப்பான ஆட்டத்தினால் 04:00 கோல் கணக்கில் வல்வை அணி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டி ஆட்டநாயகனாக தர்சன் தெரிவு செய்யப்பட்டார். முதல் 02 கோல்களை பா. மயூரன் போட அடுத்த கோலினை ஜெயக்குமார் போட இறுதி கோலினை தர்சன் போட மொத்தம் 04 கோல்களாக ஆட்டம் முடிவடைந்தது