றெயின்போ வி.க நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேதாஜி எதிர் றெயின்போ வி.க மோதியது.இரு அணியும் எந்தவித கோல்களும் அடிக்காமையினால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. வெற்றியை தீர்மானிப்பதற்கு தண்ட உதை வழங்கப்பட்டது.4:1 என்ற கோல்கணக்கில் நேதாஜி வி.க வெற்றி பெற்று சம்பியனாகியது . ஆட்ட நாயகனாக றெயின்போ வி.க வீரர் பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டார். சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக நேதாஜி வி.க. வீரன் தர்சன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல்கீப்பராக நேதாஜி வி.க வீரன் ஜிவிந்தன் தெரிவு செய்யப்பட்டார்