வரலாறு என்றும் அவளை வணங்கும்.
அதற்குச் சொந்தமான தமிழ்மகள்
முதல் பெண் கடற்கரும்புலி
கப்டன் அங்கயற்கண்ணி.
ஆண் போராளிகளுக்கு சரிநிகரான நீரடி நீச்சல் பயிற்சிகளை முடித்தவள்.
உயர்சக்தி வெடிமருந்து நிரப்பப்பட்ட
அந்தப் பாரிய குண்டை நீருக்குள்ளால்
கட்டி இழுத்துக்கொண்டு
மாதகல் திருவடிநிலை எனுமிடத்திலிருந்து
நீந்திச்செல்வதற்கு தயாரானபோது அவள் சொன்னாள் “தமிழீழப்பெண்களின் வீரத்திற்கு இலக்கணமாய் எனது சாவு அமையும்”எனக்காக யாரும் கலங்கக்கூடாது நான் சந்தோசமாகவே வெடித்துச் சிதறுவேன்.இந்தக்கடலிலும் கடற்கரைக்காற்றிலும் கலந்து உங்களோடு வந்து உறவாடுவேன்.
சொல்லிவிட்டபடி அந்த மெல்லிய இருளுக்குள் கையசைத்துப் போனவள் திரும்பி வரவேயில்லை.
காங்கேசன் துறைமுகத்தில் தரித்துநின்ற சிறிலங்காவின் கட்டளைக் கண்காணிப்பு கப்பலோடு கொண்டுசென்ற குண்டை பொருத்தி நீருக்கடியில் நின்று அது வெடிக்கும்வரை அழுத்திப்பிடித்திருந்து நீருக்குள் தீமூட்டி வெடித்துச் சிதறினாள்.
நேரம் சரியாக நடுச்சாமம்12:34 -16/08/1994-எங்கள் காதுகளில் அவள் எழுப்பிய வெடியோசை.ஒட்டுக்கேட்கும் நவீன கருவிகளோடு இருந்த போராளிகள் இருவரும் இராணுவத் தலைமையகத்திற்கு அனுப்பபட்ட செய்தியை சிறப்புத்தளபதி சூசை அண்ணையிடம் கூறியபோது கட்டளைக்கப்பலும் கூடவே அதனருகில் நின்ற டோறாக் கலமும் நீருக்கடியில் மூழ்கியது உறுதிப்படுத்தப்பட்டது.
(அதிகாலைச்செய்தில் சிங்களக்கடற்படைப் பேச்சாளர் அதனை ஒப்புக்கொண்டு பேட்டியளித்தார்)
‘சாதிக்கத் துணிந்துவிட்டால் சாதாரண மனிதனும் சரித்திரம் படைக்க முடியும்’எனும் எமது தேசியத் தலைவரின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப ஒரு கடற்புலிப் போராளியாக இணைந்துகொண்டவள் ஓர்மமும் துணிவும் வீரமும் கொண்டவளாக அலைகளோடு போராடி கடும் பயிற்சிகளை நிறைவுசெய்து நீருக்கடியால் பாரிய வெடிகுண்டோடு நீந்திச்சென்று கப்பலைத்தகர்த்து காவியமானாள்.
தமிழீழப் பெண்கள் வரலாற்றில் முதல் பெண் கடற்கரும்புலியாகவும்,உலகப்பெண்கள் வரலாற்றில் இனத்தின் விடுதலைக்காக தனது 21 வது வயதில் நீருக்கடியில் எதிரிக் கப்பலைத் தகர்த்து வெடித்துச்சிதறிய முதல் பெண்ணாகவும் ஒரு தமிழச்சியாக பெருமை சேர்ந்தவள் கப்டன் அங்கயற்கண்ணி.
வரலாறு என்றும் அவளை வணங்கும்.