மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 7 சனவரி 1923 — இறைவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2018
திருமதி தெய்வநாயகி ஆறுமாமுகப்பெருமாள் (குஞ்சம்மாள்)
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி ஆறுமாமுகப்பெருமாள் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற அருணாசலம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள் அவர்களின் பாசமிகு துணைவியும், சுந்தரம்மாளின் தவப்புதல்வரான குலேந்திரன் அவர்களின் அன்புச் சின்னம்மாவும், வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராசா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இலட்சுமியம்மாள், வள்ளியம்மாள், நாகம்மாள், சுந்தரம்மாள், செல்லப்பாக்கியம், பாலசுந்தரம் ஆகியோரின் அருமைச் சகோதரியும், ராம்குமார், காலஞ்சென்ற குகதாஸ், ராமகிறிஸ்ணன், வைத்தியகுமார், ரஞ்சினி, சரோஜா, பவாணி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும், கலைவாணி, லோகேஸ்வரி, சத்தியகுமார், ஜெயரூபவதனி, சுஜிதா, சதீஸ்குமார், சசிகலா, பிரகாஷ், பிரதீஸ்குமார், விஜிகலா, கல்யாணி, ஹரியரன், விக்னேஷ், கலைச்செல்வி, குமரன், அருணன், நிருந்தன், காவியா, செவ்வந்தி, பிரியந்தி, துவாரகீஷ், தனுஷ், துளசி, ரதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மேனகா, ராதிகா, செந்தூரன், ஹரணி, ராகன், ஆருஷன், வைஷாலி, நீதன், தீரன் ஆதித்யா, சிவா, சக்தி, சஹானா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 20-08-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-08-2018 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||
|