வடமராட்சியில் கடலட்டை பிடித்துக் கைதானோரை கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிகள் உள்ளன என்று கடற்படையினர் தெரிவித்து விடுதலைசெய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இரவில் நீருக்குச் சென்று (டைவிங்) கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிகள் உள்ளன என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத அனுமதி சம்பந்தப்பட்ட திணைக்களத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
தமக்கு வழங்கப்பட்ட பணிப்புக்கு அமைய நடவடிக்கை எடுத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனுமதி பெற்றிருப்பதால் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடலட்டை பிடித்தமைக்காகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயற்சிக்கப்படுகின்றது என்ற தகவலை அடுத்து பருத்தித்துறை நகர சபைத் தவிசாளர் கடற்படையினரைச் சந்தித்திருந்தார். அதன்போதே கடற்படையினர் இவ்வாறு கூறியுள்ளனர்.