அமரர் விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் நடாத்தும் 21(1997.01.01) வயதுப்பிரிவினருக்கான அணிக்கு 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகமானது அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மாலை 4.00 மணியளவில் கொற்றாவத்தை சிவானந்த விளையாட்டுக்கழக மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்தியது. ஆட்டம் தொடங்கி 5ஆவது நிமிடத்திலே வல்வை விளையாட்டுக்கழக வீரன் தருண் தனது அணிக்கான முதலாவது கோலை பதிவுசெய்தார்.ஆட்ட நேர முடிவில் மேலதிகமாக எவ்வித கோல்களும் பதிவுசெய்யப்படாமையால் வல்வை விளையாட்டுக்கழகமானது 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.
நாளைய தினம் காலை 8.00 மணியளவில் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று ஆட்டத்தில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தை வல்வை விளையாட்டுக்கழகமானது எதிர்கொள்ளவுள்ளது.