மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அதிகாலை வேளையில் வாகனவிபத்து……
கிளிநொச்சி முழங்காவில் விபத்து இருவர் படுகாயம் !!
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த படிரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து கிளிநொச்சி முழங்காவில் 19 ஆம் கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனமே விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முழங்காவில் ஆதாரவைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான் என்றும் தெரியவருகிறது.