கட்டப்பட்டு வருகிறது நெடியகாடு இளைஞர் நிலையம் (உடற்பயிற்சி மையம்) அமைத்தல் மற்றும் தண்ணீர் வசதி அமைத்தல் பணிகள்.
இந்த பணி இளைஞர் சம்மேளனத்தின் சிரம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 3 லட்சம் ரூபாய் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மொத்த திட்டம் 6 லட்சம் ரூபாய் மதிக்க தக்கது.
இப்பணியில் இளைஞர்கள் பங்களிப்பை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு கட்டிடம் அதாவது சிறிய ரக உள்ளக விளையாட்டு அரங்கம் ( மேசைப்பந்து மற்றும் கரம் என்பன விளையாட கூடிய கட்டிடம்) அடிப்படை வசதி உள்ளடக்கிய ( 12 லட்சம் மதிப்புள்ள) கட்டிடம் எமது கழகத்திற்கு இளைஞர் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தினை வழங்கினால் இத்திட்டமும் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பமாகும்.