Search

வெடுக்குநாரி மலை விவகாரம் தொடர்பாக மாகாணசபையில் பிரேரணை கொண்டு வரப்படும் என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாரி மலை விவகாரம் அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் விஜயம்.

வெடுக்குநாரி மலை விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாணசபையில் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.வெடுக்குநாரி மலைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழர்களுடைய ஆலயமாக இந்த சிவன் ஆலயம் விளங்கிவருகிறது அந்நிய படையெடுப்புக்கள் மற்றும் இராணுவநடவடிக்கைகள் காரணமாக தடை ஏற்பட்டதன் பின்னர் தற்போது தொல்லியல் திணைக்களம் தடைகளை விதிக்கின்றது.
ஆலயங்களை புனரமைக்கும் போதுதொல்லியல் திணைக்களமும் மக்கள் தமது காணிகளில் மீளகுடியமரும் போது வன இலாகாப்பிரிவினர் தடை விதிக்கின்றனர்.அத்தோடு நெற்செய்கையின் போது மகாவலி அதிகார சபையினர் எமது நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் கதிர்காமம் குருந்துமலை ஒதியமலை போன்ற பகுதிகள் தமிழர் இடமாக இருந்து சிங்கல ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் வெடுக்குநாரி மலையும் அபகரிக்கும் நோக்கில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

எனவே இந்த இடத்தை பாதுகாப்பதற்க்கும் எமது மக்கள் சுகந்திரமாக வழிபாடு செய்ய அனைத்து மக்கள் ஒன்றினைய வேண்டும் எனவும் இது தொடர்பாக மாகாணசபையில் பிரேரணை கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *