நெடியம்பதியான் வசந்தோற்சவத்தை பூங்காவனம் இந்திரலோகமாக மாற்றும். கணபதி மின் அமைப்பாளர்கள்.
இலங்கையின் வடக்கு எங்கும் தங்கள் தனித்திறமையால் விழாக்களுக்கு மின் ஒளி விருந்து அளிக்கும் “வட இலங்கை புகழ்” கணபதி மின் அமைப்பாளர்கள். தங்களின் குலதெய்வமான நெடியம்பதியானின் வசந்தோற்சவம் இரவு(28.08.2018). பூங்காவன உற்சவத்தை அனைவரும் வியக்கும் வண்ணம் மின் ஒளியால் மிளிர வைத்து ஆலய வீதியையும் அதன் சுற்றாடலையும் மிக அழகாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள் கணபதி மின் அமைப்பாளர்கள்.