தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் லண்டன் மற்றும் கனடா வாழ் உறுப்பினர்களின் கலந்துரையாடல், லண்டனில் நேற்று (28.05.2017 ) இனிதே நடைபெற்றது

தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் லண்டன் மற்றும் கனடா வாழ்  உறுப்பினர்களின் கலந்துரையாடல், லண்டனில் நேற்று (28.05.2017 ) இனிதே நடைபெற்றது

நேற்று 28.08.2018 லண்டனில் கனடாவில் இருந்து வருகை தந்த எமது கழகத்தின் மூத்த உறுப்பினர்களான ரகு அண்ணா, தனம் அண்ணா மற்றும் மணி ஆகியோருடன் லண்டனில் வாழும் எமது கழக உறுப்பினர்களும் இணைந்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

நடைபெற்ற கலந்துரையாடலில், முதன்மையாக பல வருடங்களாக நடைபெறாமல் இருக்கும் தீருவில் இ.வி.கழகத்தின் மெய்வல்லுனர் போட்டியை வரும் 2019ஆம் ஆண்டு April மாதம் நடத்துவதென ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது இது தொடர்பாக தாயகத்தில் எமது கழக பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது

தாயகதத்தில் நடைபெற இருக்கும் தீருவில் இ.வி.கழகத்தின் மெய்வல்லுனர் போட்டிக்கான வெளிநாட்டு தொடர்பாளராக லண்டனில் தங்கக்கட்டி அண்ணா அவர்கள் செயற்படுவர் என தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அவருடன் இணைந்து அனைவரும் செயற்படுவதாக உறுதியளித்தனர்

கனடாவில் இருந்து வருகை தந்த ரகு அண்ணா, தனம் அண்ணா மற்றும் மணி அவர்கள் தாமும் கனடாவில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து நடைபெற இருக்கும் மெய்வல்லுனர் போட்டியை சிறந்த முறையில் நடத்துவதென உறுதியளித்தனர்.

மற்றும் எமது கழக முத்த உறுப்பினர் ரகு அண்ணா சில சிறந்த கருத்துகளை முன்வைத்தார் அத்துடன் கலந்துரையாடல் இனிதே முடிவுற்றது

மிகவும் குறிகிய நேரத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்தமையால் கலந்துரையாடலில் பங்குபற்ற முடியாமல் போன எமது கழக உறுப்பினர்களுக்கும் இதை அறியத்தருகின்றோம்.

நன்றி

தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம்

Leave a Reply

Your email address will not be published.