22ம்ஆண்டு செம்மணிபடுகொலை நினைவேந்தல் ஆரம்பம்.

22ம்ஆண்டு செம்மணிபடுகொலை நினைவேந்தல் ஆரம்பம்.

22ம்ஆண்டு செம்மணிபடுகொலை நினைவேந்தல் ஆரம்பம். தற்போது நினைவேந்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

வட தமிழீழம் யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது செம்மணி பகுதியில் கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட, சந்திரிக்கா அரசின் காலத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக பிரதான சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவு கூறப்பட்டனர். இந்த நினைவு தினத்தில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தியின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்த நினைவு தினத்தின் போது 50 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த அஞ்சலி நிகழ்வை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நடாத்தியிருந்தனர்.

குறித்த சம்பவம் 1996ம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கழுத்தை நெரித்துபடுகொலை செய்திருந்தனர். செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனான யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

இவர்களின் நினைவு தினமும் மற்றும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களும் நினைவுகூறப்பட்டனர்.

.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.