அலங்காரக் கந்தனின் தேர் உற்சவம்!
யாழ் நல்லூர் அலங்காரக் கந்தன் லட்சக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரிலேறி வரும் வண்ணக்காட்சி.
தோள் ஏறித்தவழும் குழந்தை போலே.
தேர் ஏறிக் குழந்தை வேலன் வருகையிலே.
கள்வரும் அங்கே கன்னியர் அங்கே.
உள்வரும் உத்தமர் அங்கே.
பண்பிலார்.பகட்டுக்கு வந்தோர்.
எனப்பலரும் வந்தே உந்தன் காலடி தொழுகையிலே
எல்லோரும் “பக்தர்கள் “என்றே எண்ணும்
உத்தன் அருளே அருள்.