அன்பான தமிழ் மகன் மதியின் ‘தமிழகம்’ புதுமனை புகு விழா சமய, கலாச்சார, பண்பாட்டு வழக்கப்படி நேற்று காலை இனிதே நடைபெற்றுள்ளது.
இனவழிப்பு போரின் வடுவை மாறா ரணமாக தமது வாழ்வில் சுமந்து நிற்கும் நிலையில் அத்தி பூத்தாற்போல் நிகழும் மனமகிழ் தருணங்களில் ஒன்றாக அமைந்துவிட்ட புதுமனை புகு விழாவின் பதிவு.
இவரின் குடும்பம் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய பங்கானது அளப்பெரியது மகனை போராட்டத்தில் தானாகவே இணைத்தவர் இவரின் தந்தை. ஈழநாதம் பத்திரிகையில் செய்தியாளராகவும் பணியாற்றியவர்.தற்போது சக்தி Tv செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார். இவரின் மூத்த மகனின் பெயர் ம.பிரபாகரன் தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் நமத்தையே சூட்டியுள்ளார், தற்போது அவரின் இல்லத்திற்கும் தமிழகம் என பெயர் சூட்டியுள்ளார். தமிழகம் என்பது தமிழ்+அகம் என்பதாகும்.