Search

வல்வெட்டித்துறை நகரசபையின் அமர்வு 10.10.2018

வல்வெட்டித்துறை நகரசபையின் அமர்வு 10.10.2018

வீதி விளக்கு தொடர்பாக சுதந்தர கட்சி உறுப்பினரின் கேள்விக்கு அதாவது தான் ஒரிடத்தில் பூட்டியிருந்த மின் குமிழை ஏன் நாற்சந்திக்கு மாற்றப்பட்டது.அதற்கு தவிசாளர் அவரின் கருத்தை உள்வாங்கி உங்களது விருப்பப்படியே அவர்குறிப்பிட்ட இடத்தில் விளக்கை பொறுத்வதாகவும் அனைத்து உறுப்பினர்களையும் புதிய விளக்குகள் பொறுத்வதற்கான விபரங்களை வழங்குமாறு வேண்டினார்.

மற்றும் விடயங்களும் ஆராய்யப்பட்டது.இருப்பினும் தேவையுள்ள தேவையற்ற விடயங்களுக்கு உறுப்பினர்கள் அதிகளவு நேரத்தை கையாழ்வதை அவதானிக்க முடிந்திருந்தது.

நகர சபை செயலாளரினால் அன்றாட நடவடிக்கைக்கான செலவு விபரங்களை சபையின் அங்கிகாரத்தை பெறுவதற்கான அறிக்கைகளும் வாசித்து அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு கழிவகற்றல் மக்கள், மக்கள் உறுப்பினர் நகரசபையின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு 50 லோட் அகற்றியதற்கான நிதியும் சபையின் அங்கிகாரத்தை பெற்றறு.

நீரியல் வளத்துறை அதிகாரியின் விண்பத்திற்கு இணங்க கடற்றொழிலாளர் கிராம அபிவிருத்தி திட்டமும் அங்கிகாரத்தை பெற்றது.இது செய்யப்படலாம் எனவுள்ளது.

ஒக்டோபர் வாசிப்பு மாத நிகழ்வுக்கான செலவின அறிகையும் அங்கிகாரிக்கப்பட்டது.

பின்னர் அன்றைய தினத்தில் சபையின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத தீருவில் தூபி சம்மந்தமாக ஈபி.ஆர்.எல்.எப் உறுப்பினர் விபரிக்க சபை காரசாரமாக சூடு பிடிக்க சபையின் தலைவர் அமைதியாக போங்கள் என்று கூறியும் சபை அமைதியாகதால் சபை இன்று ஒத்திவைக்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *