2009 இல் ஒவ்வொரு எறிகணைத்தாக்குதல்களில் இருந்து தம்மைபாதுகாக்க கையில் இருக்கின்ற பொருட்களை வைத்தே பதுங்ககழி அமைக்கவேண்டும். வழமையாக பனங்குற்றிகள், தென்னங்குற்றிகள், தேக்குமரங்கள், மண்ணெண்ணெய் பரல்கள், மற்றும் அரிசிப்பைகளில் மண்ணினை நிரப்பியும் பதுங்ககழி அமைப்பது பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். முள்ளிவாய்க்காலில் இருந்த பொழுது வீட்டில் இருந்த சாறி,படுக்கைவிரிப்பு போன்றவற்றில் பைகளாக தைத்து மண்ணைநிரப்பியே பலரும் பதுங்ககழிகளை அமைத்துக்கொண்டார்கள். மணல்தரைகளில் பதுங்ககழி அமைப்பதற்கு இந்தவகையே இலகுவானதாக அமைந்திருந்தது.














Leave a Reply