இந்தோனேசியாவில் பனைத்தொழில்களை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழும் பகுதி, கலிமண்டன் மாகாணம் ஆகும். இங்குள்ள பனை பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஹசன் ஃபட்லி (41) தொழிற்சாலையையொட்டியுள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.சம்பத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட வாய்த் தகராறு சண்டையாக முற்றியதால் கோபமடைந்த ஹசன் ஃபட்லி, பனங்காயை சீவும் அரிவாளால் தனது மனைவி, 12 வயது மகன், 4 வயது மகள் மற்றும் 2 வயது மகன் ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
ரத்த வெள்ளத்தில் 4 பேரும் கட்டிலில் பிணமாக சாய்ந்தனர். பிணங்களுடன் அதே கட்டிலில் இரவு முழுவதையும் கழித்துவிட்டு, விடிந்த பின்னர் சாவகாசமாக தொழிற்சாலையின் காவலாளியிடம் முன்நாள் இரவு நடந்த சம்பவத்தை அவர் தெரிவித்தார்.
காவலாளி அளித்த தகவலின் பேரில் அவரை கைது செய்த போலீசார், ஹசன் ஃபட்லிக்கு மனநோய் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளனர்.