நம்பினால் நம்புங்கள் ! இரட்டை முகப் பெண் !

நம்பினால் நம்புங்கள் ! இரட்டை முகப் பெண் !
உகண்டா நாட்டைச் சேர்ந்த ரிரைனி என்னும் 9 வயதுச் சிறுமியையே நீங்கள் முதலாவது படத்தில் பார்க்கிறீர்கள். இவருக்கு முகத்தில் மற்றுமொரு முகம் இருக்கிறது. இரட்டை முகம் கொண்ட பெண் இவரா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இது ஒரு கட்டி என்கிறார்கள் பிரித்தானிய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள். உகண்டா நாட்டில் இருந்த இப் பெண்ணின் நிலையை கண்டு பொறுக்கமுடியாத ஒரு தொண்டு நிறுவனம் இவருக்கு உதவிகளைப் புரிய முன்வந்தது. இருப்பினும் ஆபத்தான் இந்த சத்திரசிகிச்சையைச் செய்ய எவரும் முன்வரவில்லை.

இதேவேளை பிரித்தானியாவில் உள்ள சத்திரசிகிச்சை நிபுணர்கள் தாமாகவே முன்வந்து இதனைச் செய்து சாதனை படைத்துள்ளார்கள். இந்த 9 வயது சிறுமி இதுவரை காலமும் அனுபவித்து வந்த கொடுமைகள் பல. இவர் ஒரு சாத்தான் என்று மக்கள் கூறினார்கள், பள்ளி செல்லக் கூடாது என்றார்கள், வேறு பிள்ளைகள் இவருடன் சேர்ந்து விளையாடுவதே இல்லை. இன் நிலை அனைத்தும் தற்போது மாறியுள்ளது. நன்றி பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு !

Leave a Reply

Your email address will not be published.