Search

எங்களுக்காக எரிந்தவர்கள் (ஜனவரி 29 ஈழத்துக்காக எரிந்தவர்களை நினைவில்கொள்ளும் நாள்)

ஈழத்தில் நடைபெற்ற தமிழினஅழிப்புக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி தீயுடன் சங்கமித்து தங்கள் இன்னுயிரை ஈகம்செய்த வீரமறவர்களை என்றும் நினைவில் வைத்து வணங்குவோம்.
ஜனவரி 29.பக்கத்து மண்ணில்,ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் வயதுவேறுபாடின்றி குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர் என்று கொன்று குதறி எறியப்பட்டு ஒரு பெரும் தமிழின அழிப்பு நடந்துகொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்காக தமிழர்கள் அனைவரும் எழவேண்டும் என்ற வேண்டுகோளை அற்புமான இறுதிக்கடிதமாக எழுதிவைத்துவிட்டு நெருப்புக்குள் நின்று கருகிய முத்துக்குமாரனின் நினைவுநாள்.

முத்துக்குமாரனும் அவனைப்போலவே ஈழத்துக்கு தமிழினத்துக்காக தங்களை வெந்தணலில் வேகவைத்த
அனைவரையும் நாம் மறந்துபோனால் நன்றிகொன்றவர்களாகி விடுவோம்.
ஜனவரி 29 ஈகியர்தினம்.ஈழத்துக்காக எரிந்தவர்களை நினைவில்கொள்ளும் நாள்.

காலம் எத்தனை கடந்துபோகினும்
எம் மக்களின் கதறலுக்காக
அழிவிலிருந்து எம் இனத்தை
காப்பாற்ற வேண்டும் என்ற
உயரிய எண்ணத்துடன்
உடல்கருக தீயில் எரிந்து
உயிர்தந்த உத்தமர்களை
vvtuk.com இணையம் தலைதாழ்த்தி
என்றும் வணங்கிநிற்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *