இணையதளத்தில் மாணவர்கள் வெளியிட்ட ஆபாச புகைப்படத்தால் தூக்கில் தொங்கிய மாணவிகள்

இணையதளத்தில் மாணவர்கள் வெளியிட்ட ஆபாச புகைப்படத்தால் தூக்கில் தொங்கிய மாணவிகள்

மேற்கத்திய நாடுகளில் இணையதள மோகம் இளைஞர்களை படுவேகமாக சீரழித்து வருகின்ற நிலையில் இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தால் 2 மாணவிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனடாவில் உள்ள நோவோ ஸ்காட்யா என்ற இடத்தில் வசிக்கும் லியா பார்சன் என்பவரின் மகள் ரெட்டா பார்சன். இவரை கடந்த 2011ம் ஆண்டு 4 இளைஞர்கள் பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்த ஒரு வருட விசாரணைக்கு பிறகும்,பொலிசாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, யார் மீதும் குற்றச்சாட்டு கூறப்படாமல் வழக்கை கிடப்பில் போட்டனர். இந்நிலையில் ரெட்டாவை 4 இளைஞர்கள் பலாத்காரம் செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.

அதைக்கண்டு லியா அதிர்ச்சி அடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அடுத்து பொலிசார் வழக்கை மறுவிசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோன்று, அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அட்ரி பாட்(15) என்ற மாணவியை அவருடன் பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களே பலாத்காரம் செய்தனர். பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மாணவி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சுயநினைவு இல்லாமல் இருந்தபோது அவர் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த படங்களும் இணையதளத்தில் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்து அவமானமடைந்த அட்ரி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒன்லைன் சாட்டிங் மூலம் தற்கொலைக்கு தூண்டுவது, போலி பெயர்களில் அறிமுகமாகி உல்லாசமாக இருப்பது, பலாத்காரம் செய்வது, அதை ரகசியமாக படமெடுத்து இணையதளத்தில் வெளியிடுவது என்று இணையதளங்களில் அத்துமீறும் சம்பவங்கள் மேலைநாடுகளில் அதிகம் நடக்கின்றன.

பலாத்காரம் செய்த படங்களை இணையதளத்தில் இளைஞர்கள் வெளியிட்டது இரு மாணவிகளின் உயிரை பறித்திருக்கிறது. இதையடுத்து, இணையதளங்கள் மற்றும் அதை தவறாக பயன்படுத்தும் இளைஞர்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா, கனடாவில் வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.